செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 நவம்பர் 2021 (16:33 IST)

மீண்டும் சென்னையில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னையில் இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
வங்கக் கடலில் தோன்றி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் இலங்கையில் மட்டுமே கனமழை பெய்யும் என்றும் சென்னை உள்பட வட மாவட்டங்களில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் இன்று காலை கூறப்பட்டது
 
ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு சென்னையில் கனமழை இருக்கும் என்றும் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழை போல் மிக கனமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். சென்னையில் மேலும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.