1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (07:27 IST)

இரவே மாநாட்டு திடலுக்கு வந்துவிட்ட விஜய்.. மிட்நைட் மீட்டிங்கில் முக்கிய முடிவு..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற இருக்கும் நிலையில், இன்று காலை விஜய் மாநாட்டு திடலுக்கு வருவதாகத் தான் முதலில் திட்டம் இருந்தது என்றும், ஆனால் நேற்று இரவே அவர் மாநாட்டுத் திடலுக்கு வந்து அங்கு உள்ள ஒரு கேரவனில் முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இன்று அதிகாலை முதல் மாநாட்டு திடலுக்கு ஏராளமான தொண்டர்கள் வந்து கொண்டிருப்பதாகவும், லட்சக்கணக்கான தொண்டர்கள் கூட இருக்கும் இந்த மாநாட்டு திடலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகக் கசிசிதமாக பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில், நேற்று இரவே மாநாட்டுத் திடலுக்கு விஜய் வந்து விட்டதாகவும், நிர்வாகிகளிடம் முக்கிய ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இன்று நடைபெற உள்ள மாநாடு எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் எப்படி நடத்துவது, தொண்டர்கள் எந்தவித ஆபத்தும் இன்றி மாநாட்டு திடலுக்குள் வருவதும், மாநாடு முடிந்ததும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
 
மேலும், கொள்கை பிரகடன அறிவிப்பு வெளியிடுவது மற்றும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் பிரபலங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடுவது என சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸ் இன்றைய மாநாட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில், தமிழக அரசியலை புரட்டி போடும் ஒரு மாநாடாகவே இந்த மாநாட்டை அரசியல் பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர்.
 
 
Edited by Siva