1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (12:36 IST)

இன்று 7 மாவட்டங்களில் மழை: எங்கெங்கு தெரியுமா?

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல். 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து, குளிர்காலம் நடந்து வருகிறது. சில நாட்களில் அதுவும் முடிந்து கோடைக்காலம் தொடங்க உள்ளது. பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் பல உருவாவதால் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும். சில சமயங்கள் காற்றழுத்த தாழ்வு நிலை காலம் தவறி குளிர்காலத்தின் ஆரம்பத்திலும் நிகழ்வதுண்டு.
 
ஆனால் இம்முறை குளிர்கால முடிய உள்ள மார்ச் மாதத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
ஆம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.