திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (12:24 IST)

நாளை எங்கெங்கு மழை? வானிலை அப்டேட்!

நாளை தென் மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.  

 
தமிழகத்தில் மழை சீசன் முடிந்துவிட்ட போதும் வளிமண்டல சுழற்சி காரணமாக அவ்வபோது மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. சமீபத்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் நாளை தென் மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.