அலங்கார ஊர்தியை பார்க்க கால அவகாசம் நீட்டிப்பு! – முதல்வர் அறிவிப்பு!
சென்னை மெரீனா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள குடியரசு தின அலங்கார ஊர்தியை மேலும் ஒரு வாரம் காட்சிப்படுத்த உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அரசால் அலங்காரம் செய்யப்பட்ட ஊர்தி மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்த வாகனத்தை தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெற செய்ததுடன் மாவட்டங்கள் முழுவதும் காட்சிக்காக கொண்டு செல்லப்பட்டது.
தற்போது இந்த அலங்கார ஊர்தி சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி தொடங்கி இன்று வரை இந்த அலங்கார ஊர்தி மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அலங்கார ஊர்தியை காண வந்ததுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில் பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று அலங்கார ஊர்திகள் மேலும் ஒருவார காலம் பொதுமக்கள் பார்வைக்கு மெரினா கடற்கரையில் இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.