அடுத்த 2 மணி நேரத்தில் மழை: எங்கெங்கு தெரியுமா?
அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே, தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் வேலூர், திருவள்ளூர், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, பெரம்பலூர், திண்டுக்கல், கடலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.