1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 13 ஜனவரி 2021 (17:37 IST)

2021ஆம் ஆண்டின் தமிழக அரசு விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிப்பு!

2021ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான  விருதாளர்கள் பெயர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
பெயர் மற்றும் விருது பட்டியல் இதோ:- 
 
திருவள்ளுவர் விருது முனைவர். வைகைச்செல்வனுக்கு வழங்கப்படுகிறது. 
 
தந்தை பெரியார் விருது அ. தமிழ்மகன் உசேனுக்கு வழங்கப்படுகிறது.
 
அண்ணல் அம்பேத்கர் விருது வரகூர் அ.அருணாச்சலத்திற்கு வழங்கப்படுகிறது.
 
பேரறிஞர் அண்ணா விருது அமரர்.கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனனுக்கு வழங்கப்படுகிறது.
 
பெருந்தலைவர் காமராசர் விருது முனைவர் ச. தேவராஜ்.க்கு வழங்கப்படுகிறது.