வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 21 அக்டோபர் 2020 (15:11 IST)

பிக்பாஸ் மூலம் வாக்குகளை பெற போராடுகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்

கமல் ஹாசன்  பிக்பாஸில் மஹாபாரதம் பேசி மத வாக்கை பெற போராடுகிறார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் தற்ப்போது சினிமா, பிக்பாஸ் அரசியல் என நாளா பக்கமும் படு பிசியாக இருந்து வருகிறார். இவர் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே திமுக மற்றும் அதிமுக கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதிலும் அதிமுக கட்சியின் நடவடிக்கைகளை தொடர்ந்து கிண்டல் அடித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்று அங்கும் இரட்டை அர்த்தத்தில் பேசி அரசியல் செய்து வருகிறார். அந்தவகையில் கடந்த வராம் பிக்பாஸில் கமல் பேசிய மகாபாரதம் அரசியல் கட்சிகளுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேட்டதற்கு, "தேர்தல் வருவதால் பிக்பாஸ் மூலம் மகாபாரதம் பற்றி பேசி, குறிப்பிட்ட மதத்தின் வாக்குகளை பெற வேடம் போடுகிறார் கமல்ஹாசன் அவர் மாற்றி, மாற்றி பேசுபவர்,கமல் என்ன பேசுகிறார் என்று யாருக்கும் புரியாது என கூறியுள்ளார்.