எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.1 கோடி நிதி வழங்கினார்
ஆடு திருடியவர்களைப் பிடிக்க சென்ற திருச்சி சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் அவர்கள் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நிதி வழங்கினார்.
திருச்சி சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆடு திருடர்களான 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை சுற்றிவளைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், திருச்சி நாவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதாகியுள்ள மணிகண்டனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து கீரனூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆடு திருடர்களாக் கொல்லப்பட்ட எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று ரூ.1 கோடி நிதி வழங்கினார்.