1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2025 (07:51 IST)

இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.. முதல்வர் தொடங்கி வைக்கிறார்..!

Stalin
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவை வழங்கப்பட உள்ள நிலையில், இதற்காக 250 கோடி ரூபாய் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர், பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வரை பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்க பணம் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த முறை ரொக்கப் பணம் இல்லை என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva