மாநகராட்சியாக தரம் உயர்ந்த தாம்பரம்! – அரசாணை வெளியீடு!
தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழத்தில் பல்வேறு ஊராட்சிகளை நகராட்சிகளாகவும், தாம்பரத்தை மாநகராட்சியாகவும் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான தமிழக அரசின் அரசாணை இன்று வெளியாகியுள்ளது.