கெட்டுப்போன உணவால் சிறுமி உயிரிழப்பு! – உணவக உரிமையாளர், சமையல்காரர் கைது!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (09:54 IST)
ஆரணியில் கெட்டு போன உணவை சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்த வழக்கில் உணவக உரிமையாளர், சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை ஆரணி காந்தி ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அசைவ உணவகத்தில் நேற்று முன்தினம் அசைவ உணவு சாப்பிட்ட 12 பேர் வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்ட அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவில் கெட்டுபோன உணவு பொருட்களை சேர்த்ததே காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதை தொடர்ந்து போலீஸார் உணவக உரிமையாளர் மற்றும் சமையல்காரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :