1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஜூலை 2022 (15:37 IST)

சென்னை வருகிறார் டி ராஜேந்தர்: முழுமையாக குணமடைந்ததாக தகவல்!

T Rajendhar
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த டி ராஜேந்தர் நாளை சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
 நடிகர், இயக்குனர், தயாரிப்பாலர்  டி ராஜேந்தர் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அதன்பின் அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் 
 
நடிகர் சிம்பு மற்றும் அவரது குடும்பத்தினர் டி ராஜேந்தருக்கு தேவையான சிகிச்சை ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த டி ராஜேந்தர் தற்போது உடல்நலம் குணமாகியதை அடுத்து சிம்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு திரும்பினார் 
 
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் இருந்து நாளை காலை டி ராஜேந்தர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன இதனை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்