ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (14:44 IST)

தஞ்சையில் காணாமல் போன 200 ஆண்டு பழமையான ஓவியம் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

saraboji art
தஞ்சையில் காணாமல் போன 200 ஆண்டு பழமையான ஓவியம் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
தஞ்சையில் காணாமல் போன 200 ஆண்டுகள் பழமையான ஓவியம் அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
தமிழகத்தைச் சேர்ந்த புராதன பொருட்கள் சிலைகள் உள்பட பல பொருள்கள் திருடப்பட்டு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கில் விற்கப்பட்டு வருகிறது என்பதும் அவை தற்போது ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு மீட்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் தஞ்சை சரஸ்வதி மகாலில் காணாமல்போன 200 ஆண்டுகள் பழமையான சரபோஜி சிவாஜி ஓவியம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இதனை அடுத்து இந்த ஓவியத்தை இந்தியா கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன