1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 3 நவம்பர் 2021 (13:26 IST)

சென்னை தி.நகர் ஜெயச்சந்திரன் கடையில் தீ விபத்து

சென்னை தி நகரில் உள்ள ஜெயச்சந்திரன் கடையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளதால் அந்த தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நாளை தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருப்பதை அடுத்து சென்னை தி நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள ஜெயச்சந்திரன் பர்னிச்சர் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தீ விபத்து காரணமாக அங்கு கூடியிருந்த மக்கள் பல இடங்களில் சிதறி ஓடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் திநகரை நோக்கி விரைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது