ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (17:59 IST)

ரூ.3 கோடி இழப்பீடு கேட்ட சுவாதியின் பெற்றோர்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

court
கடந்த 2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சுவாதியின் பெற்றோர்கள் 3 கோடி இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
3 கோடி இழப்பீடு கோரி சுவாதியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு அலட்சியம் காரணமாகவே தனது மகள் சுவாதியின் மரணம் ஏற்பட்டதாக பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து இரயில்வே தரப்பு தங்களுக்கு 3 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை உரிமையியல்  வழக்காக தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது.