வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 18 ஜூலை 2019 (16:40 IST)

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவை கைது செய்யப்போவதாக மிரட்டல் ?

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.இந்நிலையில் சமீபத்தில் மோடி அமைச்சரவை புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டது. அதற்கு  தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தன. 
இந்நிலையில் சமீபத்தில்  பள்ளி மாணவர்களுக்காக உதவித்தொகை வழங்கும் விழாவில் மேடையில் பேசிய நடிகர் சூர்யா,புதிய தேசியக் கல்விக்கொள்கையை விமர்சித்து, நீட் தேர்வு மற்றும் பலவிதமாக நுழைவுத்தேர்வுகளுக்கு எதிராகவும் அவர் பேசினார். அதில் ஒரு கெட்ட வார்த்தையும் பயன்படுத்தினார்.
 
சூர்யாவின் பேச்சுக்கு ஆளுங்கட்சி தரப்பினர் மற்றும், பாஜகவினர் சூர்யாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இது தமிழக்த்தில் முக்கிய பேசுபொருளாகி விட்டது.
 
இதனைத்தொடர்ந்து பல்வேறு நபர்கள் சூர்யாவுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது. 
 
இந்நிலையில் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான  ஜோதிகாவின் நடிப்பில் வெளியான ராட்சசி படத்தில், ஆசிரியர்களை அவர் கேவலப்படுத்திவிட்டதாக கூறி,தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் சார்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சூர்யாவிடம் இனிமேல் இந்தக் கல்விக்கொள்கைக்கு எதிராக பேசக்கூடாது என்று காவல்துறை உளவுத்துறை சார்பில் சூர்யாவுக்கு  எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.