வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்து வழக்கு: டெல்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்றும், வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க வேண்டும் என்றும் முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி. பழனிசாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனால் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எந்தவித தடையும் தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர்களுக்கு எதிராக வழக்கு தொடரந்த முன்னாள் எம்.பி.,கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் முன்னிலையில் சமீபத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது