சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை… உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
நீதித்துறை குறித்து அவமதிப்பு செய்யும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது மத்திய கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு அரசு ஆவணங்களை கசியவிட்டதாக பணிநீக்கம் செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தற்போது அரசுப் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று வந்த நிலையில் உச்சநீதிமன்றம் அவரின் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும் சவுக்கு சங்கர் இந்த வழக்கு சம்மந்தமாக அடுத்த கட்ட விசாரணைக்கு வரும் வரை எந்த விதமான கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.