ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 9 நவம்பர் 2022 (10:40 IST)

இலங்கை வீரர் குணதிலகவுகு ஆஸ்திரேலியாவில் மூன்று மாதம் சிறை!

பாலியல் புகார் காரணமாக ஆஸ்திரேலியா போலீசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா இலங்கை அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி ஆஸ்திரேலியா சென்ற நிலையில் அந்த அணியில் உள்ள ஆல்ரவுண்டர் வீரரான தனுஷ்கா குணதிலகா ஒரு பெண்ணோடு பழகி, அவர் வீட்டுக்கு சென்று பாதுகாப்பற்ற முறையில் அவரின் விருப்பத்துக்கு மாறாக பாலியல் உறவு கொண்டுள்ளார்.

இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ள அவர் மீதான வழக்கில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் அவருக்கு அடுத்த ஆண்டு ஜனவரி வரை சிறைதண்டனை விதித்துள்ளது. குணதிலக இதற்கு முன்பும் இதுபோல பாலியல் சம்மந்தமான புகார்களில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.