ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2024 (15:59 IST)

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு.. ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்.. இதுதான் காரணம்..!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட் ஆகியவற்றில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் சுப்ரீம் கோர்ட்டின் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை அவகாசம் கேட்டு பலமுறை ஒத்திவைத்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

சிறப்பு அமர்வில் உள்ள வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் செல்வதால் செந்தில் பாலாஜியின் வழக்கை ஒத்திவைப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் மனு வரும் 22 ஆம் தேதி விசாரணை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran