செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (11:32 IST)

நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா? – உச்சநீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் ஆணையம் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாத கால அவகாசம் கேட்டிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய உச்சநீதிமன்றம் ”நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்தும்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 7 மாத கால அவகாசம் அளிக்க இயலாது என்றும், இதுகுறித்து 2 நாட்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.