திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:40 IST)

மீண்டும் தொடங்கும் மதுரை – துபாய் விமான சேவை! – முன்பதிவை தொடங்கிய ஸ்பைஸ்ஜெட்!

கொரோனா காரணமாக சர்வதேச விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மதுரை – துபாய் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக சர்வதேச விமான சேவைகள் நடைபெறாமல் இருந்து வந்தன. இந்நிலையில் அக்டோபர் 1 முதல் மதுரை – துபாய் இடையே விமான சேவையை தொடங்குவதாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.

வாரத்தின் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துபாயிலிருந்து மதுரைக்கும், ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகளில் மதுரையிலிருந்து துபாய்க்கும் விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.