ஈபிஎஸ் தொடுத்த இரட்டை இலை வழக்கு.. சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னம் வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் இன்னும் மூன்று நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர் மனுதாரராக சேர்க்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்த எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே பதிவு செய்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இரட்டை இலை சின்னத்திற்காக மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran