செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (12:37 IST)

மறைமுக தேர்தலை வீடியோ எடுக்க தேவையில்லை! – உச்சநீதிமன்றம் தடை!

மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி கவுன்சிலர்கள் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. இந்த மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிமன்றம் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன் விசாரணை இன்ப்று நடைபெற்ற நிலையில் மதுரை கிளை நீதிமன்றத்தின்  தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.’

மேலும் எதற்காக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்த விவர அறிக்கையை அளிக்குமாறு மதுரை கிளை நீதிமன்றத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.