திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (16:55 IST)

11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது : நீதிமன்றம் தீர்ப்பு

2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது ஒபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் எதிராக வாக்களித்தனர்.

கொரடா உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
 
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று மதியம் 2.15 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இன்றைய தீர்ப்பு தான் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர்களின் அரசியல் எதிர்கால வாழ்க்கையை முடிவு செய்யும் என கூறப்பட்டது.
 
இந்நிலையில், 11 எம்எல்ஏகள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், சபாநயகர் இதைத்தான் செய்ய வேண்டும் என உத்தரவிட முடியாது எனக்கூறி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரின் தகுதி நீக்க வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.