வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 ஜூன் 2020 (12:30 IST)

இட ஒதுக்கீடு ஒன்றும் அடிப்படை உரிமை அல்ல! – கை கழுவிய உச்ச நீதிமன்றம்!

மருத்துவ படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

மருத்துவ படிப்பில் அகில இந்திய இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க கோரி அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தன. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் இட ஒதுக்கீடை மறுப்பது அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும் என வாதிடப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதிகள் இடஒதுக்கீடு அடிப்படை உரிமைகளின் கீழ் வராது என்று விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடியாது என கூறியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளனர்.