தற்கொலை என்பது தீர்வல்ல ; வருங்காலம் என்பது இளைஞர்களின் கையில் - விஜயகாந்த்
சமீபத்தில் அரியலூர் மாவட்டம் எலந்தகுழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். அதனால் இந்த ஆண்டு மிகுந்த பயத்துடனே படித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று படித்துக் கொண்டிருந்த போது தனது அறையிலேயே தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள அனைவரையும் பாதித்துள்ளது. இதுகுறித்து பலரும் கருத்துகள் பதிவிட்டு வரும் நிலையில், தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கூறியுள்ளதாவது :
நீட் தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை மாணவர்கள் கைவிட வேண்டும். தற்கொலை என்பது தீர்வல்லல்; வருங்காலம் என்பது இளைஞர்களின் கையில் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.