ஆன்லைன் கிளாஸுக்கு செல்போன் இல்லை… மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (11:05 IST)
ஆன்லைன் கிளாஸ் வகுப்புகளைக் கவனிப்பதற்கு செல்போன் இல்லாத காரணத்தால் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவ மாணவிகளுக்கு செல்போன் தேவைப்படுகிறது. பல வீடுகளில் இன்னமும் செல்போன் கூட வாங்கிக் கொடுக்க முடியாத பெற்றோரின் பொருளாதார சூழல் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற கூலித் தொழிலாளியின் மகள் ரித்திகா 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்க செல்போன் வாங்கி தர முடியாத வறுமையான பொருளாதார சூழலில் அவரது பெற்றோர் இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்த ரித்திகா வீட்டில் யாருமில்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபோல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

ஒரே வருடத்தில் பல்லிளித்த திருவிக பேருந்து நிலையம்.. கொதிப்படையும் பயணிகள்..

4 முன்னாள் அமைச்சர்கள், 8 முன்னாள் எம்.எல்.ஏக்கள்.. இன்று தவெகவில் இணைபவர்களின் லிஸ்ட்..

அம்மாவின் ஆட்சியை விட நல்லாட்சி தரும் விஜய்.. தவெகவில் இணையும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கருத்து...

த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு ரூ.35 கோடி பேரம்: செந்தில் பாலாஜி, அசோக் குமார் மீது பாய்ந்தது வழக்கு..

200 பேருந்துகளில் சென்னைக்கு குவிந்த விஜயபாஸ்கர் ஆதரவு.. இன்று தவெகவில் இணைகிறார்...

அடுத்த கட்டுரையில்
Show comments