திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (09:36 IST)

கொரோனா வைரஸை கொல்வோம்; சபதம் ஏற்ற ட்ரம்ப்! – தேர்தல் ட்ரிக்கா?

அமெரிக்காவில் கொரோனாவால் பலர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா மருந்து இந்த ஆண்டின் இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் எதிர்வரும் நவம்பர் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசு கட்சி வேட்பாளராக தற்போது டொனால்டு ட்ரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மக்களிடம் பேசிய ட்ரம்ப் ”அமெரிக்காவில் கொரோனா மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு இந்த ஆண்டின் இறுதில் கிடைக்கும். அமெரிக்காவை சேர்ந்த மூன்று நிறுவனங்களின் கொரோனா மருந்துகள் கடைசி கட்ட சோதனையில் உள்ளன. எனவே நாம் கொரோனாவை கொன்று பாதுகாப்பாக வாழ்வோம்” என தெரிவித்துள்ளார்.

ஆனால் கொரோனா பரவலை அமெரிக்காவில் ட்ரம்ப் சரிவர கையாளவில்லை என குற்றம் சாட்டி வரும் ஜனநாயக கட்சியினர், மக்களின் வாக்குகளை கவர்வதற்காக ட்ரம்ப் போலியான வாக்குறுதிகளை அளிக்கிறார் என பேசி வருகின்றனர்.