கொரோனாவால வருமானம் இல்ல; விடுதிக்குள் விபச்சாரம்! – மதுரையில் பரபரப்பு!
மதுரையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் விடுதி ஒன்றில் சட்டத்திற்கு புறம்பாக விபச்சாரம் நடந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து வசதிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா செல்வது முற்றிலும் நின்று விட்டது. இதனால் மதுரை விடுதிகள் பல சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியுள்ளன. இந்நிலையில் சில விடுதிகளில் ரகசியமாக பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் மதுரை காக்கா தோப்பில் உள்ள ஸ்டார் டவர் என்ற விடுதியில் சில அறைகளில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது தெரிய வந்துள்ளது. அங்குள்ள பெண்களை மீட்டு அரசு காப்பத்திற்கு அனுப்பிய போலீஸார், பெண்களை பாலியல் தொழிலுக்கு கொண்டுவந்த குமார், முகமது ரிஸ்வான், தசரதன் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
விடுதியில் பாலியல் தொழில் செய்ய அனுமதியளித்த விடுதி உரிமையாளரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.