செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (18:28 IST)

கேரளாவை அடுத்து சென்னையிலும் தெரு நாய்களின் தொல்லை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Street Dogs
கேரளாவை அடுத்து சென்னையிலும் தெரு நாய் தொல்லை அதிகரித்து வருவதையடுத்து மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் சமீபத்தில் தெரு நாய் தொல்லை காரணமாக குழந்தைகள் முதியோர்கள் கடித்துக் குதறாப்பட்டார்கள் என்பதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து கேரளாவில் தெருநாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவை அடுத்து சென்னையிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருவதாகவும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பெண்கள் அச்சப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது 
 
நிலைமை விபரீதம் அதற்கு முன் சென்னை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.