திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (17:00 IST)

திமுக எம்.பி டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை! – மன்னார்குடியில் பரபரப்பு!

திராவிட முன்னேற்ற கழகத்தில் பொருளாளரும் எம்.பியுமான டி.ஆர்.பாலு வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளராகவும், வெற்றிபெற்ற நாடாளுமன்ற எம்.பியாகவும் இருந்து வருபவர் டி.ஆர்.பாலு. இவரது மகன் டி.ஆர்.பி ராஜா மன்னார்குடி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமான வீடு மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை கிராமத்தில் உள்ளது.

இந்நிலையில் தளிக்கோட்டையில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை நடந்த வீட்டில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கொள்ளை போன பொருட்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.