திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 27 மே 2018 (19:13 IST)

தூத்துக்குடி போராட்டம்: ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியீடு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

 
கடந்த 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100வது நாள் பேரணி நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100வது நாள் என்பதால் மக்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
 
இந்த பேரணியில் காவல்துறையினர் - மக்கள் இடையே தகராறு ஏற்பட்டு போராட்டக்களம் கலவரமாக மாறியது. இதில் காவல்துறையினர் தாக்கப்பட்டனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய துப்பக்கிச் சூடு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதில் 13 பேர் உயிரிழந்தனர்.
 
காவல்துறையினர் தாக்கப்பட்டதே துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முக்கிய காரணம் என தமிழக அரசு சார்பில் காரணம் கூறப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தின் போது நடந்த சம்பவத்தின் சிசிடிவி பதிவு வெளியிடப்பட்டுள்ளது. 
 
மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காலை 11.55 மணிக்கு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.