தூத்துக்குடி சம்பவத்திற்கு ஏன் ட்வீட் செய்யவில்லை - காரணம் சொல்லும் விவேக்
தூத்துக்குடி ஸ்டெலைட் கலவரத்திற்கு ஏன் இன்னும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என நடிகர் விவேக் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும் தங்களது கண்டனக் குரலை பதிவிட்டு வருகின்றனர். இதுவரை நடிகர் விவேக் இதற்கு எந்த கருத்தையும் பதிவிடவில்லை
இந்நிலையில் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், ஏன் tweet செய்வதில்லை என்று கேட்கிறார்கள் .மனம் மிக சோர்ந்து போய் இருக்கிறது . தூத்துக்குடி சம்பவத்தில் இருந்து மீள, நாட்கள் ஆகலாம்.சிறு பையனின் உடலில் இருந்த தடியடி காயங்கள் என் பழைய ரணங்களைக் கீறி விட்டு விட்டனவே என்று வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.