செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 31 ஜனவரி 2022 (19:33 IST)

நட்சத்திர விடுதி பார்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி !

கடந்த சில வாரங்களாக கொரொனா பரவல் குறைந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கை ரத்து செய்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பார், கிளப் மற்றும் நட்சத்திர விடுதிகள் செயல்படும் நேரம்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி  இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்த பார்கள்  காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் எனவும்,  நட்சத்திர விடுதி பார்கள் காலை 11 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் இருமடங்கு வரி செலுத்தும்  நட்சத்திர விடுதி பார்கள் 24 மணி    நேரமும் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.