பிரதமரை இழிவாக பேசுவதை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்…. இல்லையென்றால் – ஹெச் ராஜா எச்சரிக்கை
பிரதமரை இழிவாக பேசுவதை ஸ்டாலின் கண்டிக்க வேண்டுமம் எனவும் இல்லையென்றால் திமுக கட்சியின் முன்னாள் தலைவர்களை பற்றிய உண்மைகள் பாஜகவின் பேச வேண்டிய வரும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக தேசிய செயலர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழன் பிரசன்னா, மனோ தங்கராஜ் போன்றவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களை இழிவாக பேசுவதை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கண்டிக்க வேண்டும். இல்லையேல் ஈ.வெ.ரா, அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோர் பற்றிய உண்மைகள் பாஜகவினர் பேச வேண்டி வரும். என ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.