"பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்"..பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின்
மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார்
திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் பல அறிவிப்புகளை ஸ்டாலின் கூறிவருகிறார். இந்நிலையில் திருநங்கைகளை கட்சியில் சேர்ப்பதற்கான கட்சியின் விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 27%ல் இருந்து 50% ஆக அதிகரிக்கவேண்டும் என ஸ்டாலின் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.