1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 31 டிசம்பர் 2018 (19:12 IST)

திருவாரூர் தேர்தல்; சென்டிமென்ட் அட்டாக்: ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்!

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்பட 20 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
திருவாரூர் தொகுதியில் ஜனவரி 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியின் தேர்தல் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த தொகுதியின் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. 
 
இந்த தேர்தல் ஸ்டாலின் கருணாநிதி இல்லாமல் தனியாக சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். திருவாரூர் தொகுதி திமுகவிற்கு முக்கியமான தொகுதியாகும். இந்த தேர்தல் ஸ்டாலினின் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. 
 
இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது. கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற திட்டம் போட்டு வருகிறது.
 
அதன்படி, தேர்தலில் கருணாநிதிக்கு நெருக்கமான ஒருவருக்கு சென்டிமென்டாக வாய்ப்பளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில் சென்டிமென்ட் அட்டாக்கை கையில் எடுத்துள்ளாராம் ஸ்டாலின்.