நாற்பதும் நமதே என்பதுதான் நமது இலக்கு: பொன்.ராதாகிருஷ்ணன்

ponr
Last Modified ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (20:29 IST)
ஒருபக்கம் திமுக-காங்கிரஸ் கூட்டணியும் இன்னொரு பக்கம் அதிமுக-பாஜக கூட்டணியும் உறுதியாகிவிட்ட நிலையில் இந்த இரு கூட்டணியிலும் சேரும் அரசியல் கட்சிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக கூட்டணி குறித்து இன்று கருத்து கூறிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'தமிழகத்தில் மீண்டும் மிகப்பெரிய கூட்டணியை அமைப்போம் என்றும், நாற்பதும் நமதே என்பதுதான் நமது இலக்கு என்றும் கூறியுள்ளார்.

மேலும் தெய்வப்பிறவியா? என கூறும் அளவுக்கு மக்களுக்காக நேரம் பார்க்காமல் பிரதமர் மோடி உழைத்து வருவதாகவும், பிரதமர் மோடியை கலங்கப்படுத்த நினைப்பவர்கள் கலங்கிப்போய் அரசியலில் காலமாவார்கள் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :