சுபஸ்ரீயின் பெற்றோருக்கு 5 லட்சம் வழங்கிய ஸ்டாலின்.. ஆறுதலா? அரசியலா?
சுபஸ்ரீ பெற்றோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் அறக்கட்டளையிலிருந்து 5 லட்சம் நிதியுதவியாக வழங்கியுள்ளார்.
சமீபத்தில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பல்லாவரம் அருகே மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர் மீது பேனர் விழுந்தது. பேனர் விழுந்ததில் தடுமாறி கிழே விழுந்த சுபஸ்ரீ மீது அவருக்கு பின்னால் வந்த லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தை அடுத்து பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், சுபஸ்ரீயின் பெற்றோருக்கு, அவரது வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறினார். பின்பு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவியாக வழங்கினார்.
முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அதன் பின்பு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
சுபஸ்ரீயின் மீது அதிமுக கட்சியை சேர்ந்த ஒருவரின் திருமண விழாவிற்காக வைக்கப்பட்டதால், அதிமுக வை எப்பொழுதும் விமர்சனம் செய்யும் கமல்ஹாசன் சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார் என அரசியல் நோக்கோடு பார்க்க வேண்டம் என்று கமல் ஆதரவாளர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில் தற்போது எதிர்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலின் சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியாக வளங்கியுள்ளது பலராலும் அரசியல் நோக்கோடு பார்க்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.