1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (21:45 IST)

இனி கடவுள் மறுப்பு கொள்கை இல்லை: பெரியார் பிறந்த தினத்தில் ரூட் மாறிய வைகோ!

கடவுளை மற, மனிதனை நினை என்று ஒவ்வொரு பெரியார் சிலையிலும் பொறிக்கப்பட்டுள்ள நிலையில் பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து வரும் ஒருவராகிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென ரூட் மாறி கோவில்களுக்கு செல்லவுள்ளதாக கூறியதோடு, கோவில்களுக்கு செல்பவர்களை கிண்டல் செய்ய கூடாது என்றும் கூறியுள்ளார். பெரியாரின் பிறந்த தினத்தில் அவர் இவ்வாறு திடீரென ரூட் மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
 
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சிற்பங்களைக் கண்டு ரசித்தேன், கிருஷ்ணாபுரம் கோயிலுக்கு சென்றும் சிற்பங்களைக் கண்டு ரசித்தேன், அதேபோல் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு சென்றும் சிற்பங்களை ரசித்தேன். சிதம்பரத்துக்கு இதுவரை நான் சொல்லவில்லை ஆனால் விரைவில் செல்வேன்
 
 
நம்முடைய பொக்கிஷங்கள் நம்முடைய கோவில்கள். அந்த கோவில்களுக்கு எல்லோரும் செல்ல வேண்டும். நான் மசூதிக்கு செல்பவர்களையும் வாழ்த்துகிறேன், ஜெபம் கூடங்களுக்கு செல்பவர்களையும் வாழ்த்துகிறேன், அதேபோல் கோவில்களுக்கு செல்பவர்களையும் வாழ்த்துகிறேன்
 
 
திராவிட கொள்கைகளில் இருந்து மாறி விட்டாயா? அல்லது கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து விட்டாயா? என்று சிலர் என்னிடம் கேட்பார்கள். ஆனால் ஒன்றை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாற்பதுகளிலும், ஐம்பதுகளும் கொண்டிருந்த கொள்கையில் இருந்து அறிஞர் அண்ணா அறுபதுகளில் இல்லை. எனவே காலத்துக்குத் தகுந்த மாதிரி மாறிக்கொள்வதே போர்த்தந்திரம். ஜனாதிக சக்திகளை எதிர்க்க வேண்டும் என்றால் போர்த்தந்திரங்களை மாற்ற வேண்டும் என்று வைகோ பேசினார். பெரியாரின் பிறந்த தினத்தில் வைகோ திடீரென ஆன்மீக பாதைக்கு தனது ரூட்டை மாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது