வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (13:24 IST)

”உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவது எங்கள் எண்ணம் இல்லை”.. ஸ்டாலின் விளக்கம்

உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்காக நாங்கள் ஒரு போதும் நீதிமன்றத்தை நாடவில்லை என முக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

3 வருடங்களுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதனிடையே மறுவரையறை பணிகள் முடிவடையாத வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என திமுக வழக்கு தொடுத்தது.

இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளகுறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்த மற்ற மாவட்டங்களில் குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதனிடையே உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவது தான் திமுகவின் எண்ணம் என பலர் குற்றம் சாட்டிவந்தனர். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் ”உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதாற்காக நாங்கள் ஒரு போதும் நீதிமன்றத்தை நாடவில்லை, தொகுதி மறுவரையறை, இட ஒதுக்கீடு முறையாக இல்லாததால் தான் திமுக நீதிமன்றம் சென்றது” என கூறியுள்ளார்.