புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (12:10 IST)

வேற பிழைப்பே இல்லையா? புகழேந்திக்கு நோஸ் கட்: தினகரன் ஹேப்பி அண்ணாச்சி!!

அமமுகவில் இருந்து விலகி பின்னர் அந்த கட்சியை பற்றி என்ன கவலை என சென்னை உயர்நீதிமன்றம் புகழேந்தியின் வழக்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
சமீப காலமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக் இருந்த புகழேந்தி பேசி வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. அந்த சமயத்தில் புகழேந்தி அதிமுகவில் இணையப்போகிறார்? என பல கேள்விகள் எழுந்தன. 
 
ஆனால் அது நட்பு ரீதியான சந்திப்பு என புகழேந்தி விளக்கம் அளித்தார். இதனைத்தொடர்ந்து வெளிப்படையாகவே, அதிமுகவில் இணையப்போவதாக சமீபத்தில் தெரிவித்ததார். அதோடு அமமுகவை கலைப்பேன் என்றும் கூறியிருந்தார். 
இதன் ஒரு முயற்சியாக அமமுகவை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கட்சியில் இருந்து விலகிய 14 பேரின் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் கட்சியை பதிவு செய்யக்கூடாது என தெரிவித்திருந்தார். 
 
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அமமுகவில் இருந்து வெளியேறிய பின் அக்கட்சி பற்றி கவலைப்படுவெது ஏன்? நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என புகழேந்தி தரபிற்கு கண்டன் தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 
 
மேலும், கட்சி பதிவுக்காக புகழேந்தி அளித்த பிரமாண பத்திரத்தை நீக்கவும் உத்தவிட்டுள்ளது. அதனோடு கட்சி பதிவு குறித்து பரிலீக்க தேர்தல் ஆணையத்திற்கும் அறிவுறுத்தியுள்ளது. இந்த தீர்ப்பால் தினகரன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.