மக்களுக்கான திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்தவில்லை- எடப்பாடி பழனிசாமி
மக்களுக்கான திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்தவில்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து 1 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
இந்த ஆட்சியின் மீது, எதிர்க்கட்சிகளான அதிமுக, அமமுக், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடந்து வரும் அதிமுக பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த 2 திட்டங்களை மட்டும் தொடங்கியுள்ளார். ஒன்று கலைஞர் நினைவு நூலகம், மற்றொன்று, எழுதாத பேனாவை கடலில் வைப்பது… பூமியில் பேனா வைத்தால் யாராவதும் எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்பதால் அதைக் கடலில் வைக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
Edited by Sinoj