வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (12:03 IST)

ஈசிஆரில் சைக்கிளிங்… ஸ்டைலாக போஸ் கொடுத்த மு க ஸ்டாலின்!

திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் சைக்கிளிங் செல்லும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

திமுக தலைவர் ஸ்டாலின் சமீபகாலமாக தன்னை இளமையாகக் காட்டிக்கொள்வதில் ஆர்வமாக உள்ளார். இதையடுத்து தனது முடி அலங்காரத்தை மாற்றிக்கொண்ட அவர் அவ்வப்போது சைக்கிளிங் செல்லுதல் மற்றும் உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றின் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இது திமுகவின் தேர்தல் உத்திகளில் ஒன்று எனவும் சொல்லப்படுகிறது.

அதையடுத்து இன்று ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் சென்ற ஸ்டாலின் அங்கு இருந்த மக்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை சமூகவலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார்.