1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (13:34 IST)

2 மாணவிகள் ரகசிய வாக்குமூலம்: ஸ்ரீமதி தாய் எழுப்பிய சந்தேகம்!

srimathi mother
2 மாணவிகள் ரகசிய வாக்குமூலம்: ஸ்ரீமதி தாய் எழுப்பிய சந்தேகம்!
கள்ளக்குறிச்சியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அந்த மாணவியின் இரண்டு தோழிகள் இன்று நீதிபதி முன் ரகசிய வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியானது
 
இந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீமதி தாயார், ‘ரகசிய வாக்குமூலம் கொடுத்த இரண்டு மாணவிகள் உண்மையில் ஸ்ரீமதி தோழிகளா என்பதை தாங்கள் அறிய வேண்டும் என்றும் அந்த தோழிகள் யார் என்பதை தங்களுக்கு குறிப்பிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
சிபிசிஐடி தங்களுக்கு அந்த தகவலை தெரிவித்தால் அந்த தகவலை நாங்கள் ரகசியமாக காத்து வைப்போம் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஸ்ரீமதிக்கும் தோழிகள்தான் வாக்குமூலம் கொடுத்தாரா அல்லது பள்ளி நிர்வாகம் செட்டப் செய்ததா என்பது குறித்தும் எங்களுக்கு தெரிய வேண்டும் என்றும் அவர் கூறினார். ஸ்ரீமதியின் தாயார் எழுப்பிய இந்த சந்தேகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது