1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (19:40 IST)

பிகில் படத்துக்கு சிறப்பு காட்சி அனுமதி ? ரசிகர்களின் ‘ஓவர் எதிர்பார்ப்பு’ பலிக்குமா?

விஜய் நடித்துள்ள ‘பிகில்’ மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘கைதி’ ஆகிய படங்கள் தீபாவளியின்போது வெளியாக உள்ளன. இந்தப் பண்டிகையின்போது மக்கள் பலர் திரையரங்குகளுக்கு படையெடுப்பது அதிகமாகியுள்ளதால் திரையரங்குகள் இந்த படங்களுக்கு சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்து லாபம் பார்க்கலாம் என திட்டமிட்டிருந்தன.
ஆனால்,  சிறப்பு காட்சிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் தீபாவளியன்று பிகில், கைதி உள்ளிட்ட எந்த திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்ய தமிழக அரசு அனுமதி தரவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில், சிறப்புக் காட்சிக்கு அதிக அளவு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரின் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
 
ஆனால், நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் பிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
 
அதனால் ரசிகர்கள் , சிறப்புக் காட்சி வருமா , வராதா என்ற பெரும் எதிர்பார்ப்பில் பரபரப்புடன் உள்ளனர்