1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (11:19 IST)

கலங்காதே தம்பி கலங்காதே... விஜய்க்கு சீமான் ஆறுதல்!!

அதிகாரத்தை கொண்டு அச்சுறுத்த நினைப்பவர்களை எண்ணி நடிகர் விஜய் அஞ்சக்கூடாது என பிகில் குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் பேசியுள்ளார். 
 
தீபாவளியை முன்னிட்டு நாளை பிகில் மற்றும் கைதி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த இரு படங்களுக்கும் காலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றால் டிக்கெட் விலை குறித்த உறுதி அளிக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். 
 
இதனை தொடர்ந்து அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமது கேட்டு படத்தின் தயாரிப்பு குழுவும், திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியமும் அரசிடம் கோரியிருந்தனர். மேலும் அமைச்சரை நேரில் சந்திக்க இருப்பதாகவும் திருப்பூர் சுப்பிரமணியன் குறிப்பிட்டிருந்தார். 
ஆனால், நேற்று திடீரென சிறப்பு காட்சிகள் ரத்து செய்யக் கோரி அறிக்கை அனுப்பப்பட்டு விட்டதாகவும், முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும் என்றும் கடம்பூர் ராஜூ டிவிட்டரில் பதிவிட்டார். இதன்மூலம் சிறப்பு காட்சிகள் இல்லை என்பது உறுதியானது. 
 
இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நடிகர் விஜய் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்துக்கொண்டு தமிழக அரசு பழிவாங்குகிறது. விஜய் பேசியதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் பழிவாங்கும் நோக்குடன் படத்திற்கு இடையூறு செய்வது நன்றாக இல்லை. 
 
செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது, இதனால் அதிகாரத்தினர் அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். அச்சுறுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது என தெரிவித்துள்ளார்.