1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 ஜனவரி 2023 (09:52 IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு சந்தை: தேதி அறிவிப்பு

koyambedu
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கரும்பு, மஞ்சள், இஞ்சி, மண்பானைகளை உள்ளிட்ட பொருள்களை ஏராளமானோர் வாங்குவார்கள். இதற்காக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இன்று முதல் அதாவது ஜனவரி 10 முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை இந்த சிறப்பு சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தையில் கடைகளை ஏலம் விடப்படும் என்றும் அதில் மார்க்கெட்டில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இந்த சிறப்பு சந்தையில் பொதுமக்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva